டாடா ஸ்டீல் முத்துராமனை 'பெண்ணாக்கிய' தேர்தல் ஆணையம்!
ஜாம்ஷெட்பூர்: டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் பி.முத்துராமனின் பாலினத்தை பெண் என மாற்றி தேர்தல் ஆணையம் குளறுபடி செய்துள்ளது. அவரது மனைவியை ஆண் என குறிப்பிட்டு அகோரம் செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது.
ஆனால் இந்தப் பணியில் பலவித குளறுபடிகள் இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கிழக்கு சிங்க்பம் மாவட்டத்தில் டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநர் முத்துராமன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஓட்டு உள்ளது.
இங்கு தயாரிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் பட்டியலில் முத்துராமனின் பாலினம் பெண் என்றும், அவரது மனைவி
ஆண் என்றும் கூறி குழப்பியுள்ளனர் தேர்தல் அதிகாரிகள்.
வாக்காளர் பட்டியலின் 193வது பக்கத்தில் முத்துராமனின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. அவரது பெயர் விமலா தேவி என்றும், பெண் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே பட்டியலில், முத்துராமனின் மனைவி ஸ்வாதி முத்துராமனை, துத்நாத் சாஹ் என்றும், ஆண் என்றும் குறிப்பிட்டு குழப்பம் செய்துள்ளனர்.
இது மிகப் பெரிய தவறு என்று மாவட்ட துணை தேர்தல் அதிகாரி விபின் பிஹாரி கூறியுள்ளார். புகைப்பட வாக்காளர் அட்டைகளை தயாரித்தவர்கள் செய்த குழப்பமே இது என்றும் அவர் கூறியுள்ளார்.
விமலாதேவிக்கும், முத்துராமனுக்கும் ஒரே வரிசை எண்ணைக் கொடுத்ததால் வந்த குழப்பம் இது.
இந்தத் தவறுகள் தற்போது திருத்தப்பட்டு வருவதாக பிஹாரி தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications