மதுரையில் யுஎஸ் டாலர் அச்சடிப்பு-பெண் கைது
மதுரை: மதுரையில் அமெரிக்க டாலர் நோட்டுக்களை கள்ளத்தனமாக அச்சடித்து விநியோகித்ததாக பெண் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சங்கர் (45). கேரளாவை சேர்ந்த இவர் சில ஆண்டுக்கு முன்பு மதுரை வந்தார். இவரது வீட்டுக்கு கடந்த சில நாட்களாக ஒரு வாலிபர் கையில் பெரிய பையுடன் அடிக்கடி வந்து சென்றார்.
அவர் மீது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சங்கர் வீட்டுக்கு சென்றனர். அவரிடம் விசாரித்தபோது, அவரது பெயர் சாகித் ராகின்(25) என்பதும், சொந்த ஊர் வாரணாசி என்றும் தெரியவந்தது.
2 பேரையும் திலகர் திடல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அமெரிக்க டாலர்களை அச்சடித்து அதை இந்திய பணமாக மாற்றி வந்தது தெரியவந்தது.
இவர்களுடன் கேரளாவை சேர்ந்த பத்மாவதி, எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரும் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். இவர்கள் கள்ளநோட்டை சங்கரின் வீட்டிலேயே அச்சடித்து வினியோகித்து இருக்கிறார்கள்.
இவர்கள் அச்சடித்தது போக, மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பலருக்கு அமெரிக்க டாலர் அச்சடிக்கும் முறை பற்றியும் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கு அச்சு கருவி, பேப்பர், ரசாயன பொருள், மை ஆகியவற்றையும் கொடுத்துள்ளனர். இப்படி கள்ள நோட்டு அச்சடிப்பது பற்றி கற்று கொடுக்க கணிசமான தொகையையும் வாங்கி இருக்கிறார்கள்.
விசாரணையைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த அமெரிக்க டாலர் அச்சடிக்கும் கருவிகள், டாலர் அச்சடிக்க பயன்படும் பேப்பர்கள், கறுப்பு மை பாட்டில்கள், கெமிக்கல் பவுடர்கள் மற்றும் மூலப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
இதனை அடுத்து சங்கர், சாகித் ராகின், சீனிவாசன், பானுமதி என்ற பத்மாவதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications