வீராணம் ஏரி நிரம்பியது-100 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி நிரம்பி விட்டது. இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. இதையடுத்து ஏரிக் கரை உடைந்து விடாமல் தடுக்க உபரி நீர் அப்படியே வெளியேற்றப்ட்டு வருகிறது.
வெள்ளியங்கால் ஓடை வழியாக, விநாடிக்கு 2500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து வீராணம் ஏரியைச் சுற்றிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications