ஆண்டு ஊதியத்தை 1 டாலராக குறைத்துக் கொண்டு ஏஐஜி தலைவர்!

நிறுவனத்தைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள அதன் தலைமை செயல் அதிகாரியான எட்வர்ட் லிட்டி முதல் கட்டமாக தனது ஊதியத்தை வருடத்துக்கு வெறும் 1 டாலர் என்று குறைத்துக் கொண்டுவிட்டார். மேலும் தனது போனஸையும் ரத்து செய்துவிட்டார்.
இவரைத் தொடர்ந்து மற்ற அதிகாரிகளும் ஊதியக் குறைப்புக்கு முன் வந்துள்ளனர். இவர்களது போனஸ்களும் ரத்தாவதோடு ஆண்டு ஊதிய உயர்வும் ரத்து செய்யப்படுகிறது.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நிறுவனம் திவாலாகும் நிலை ஏற்பட்டதையடுத்து அமெரிக்க அரசு 80 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்து அதை நாட்டுடமை ஆக்கியது.
இந் நிலையில் சமீபத்தில் மேலும் 70 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அளித்தது குறிப்பிடத்தக்கது.
அரசு கொடுத்த மக்களின் வரிப் பணத்தை பொறுப்போடு செலவு செய்வோம் என்று தெரிவித்துள்ள சிஇஓ எட்வர்ட் லிட்டி, அரசால் மீட்கப்பட்டதற்கு நிறுவனம் மக்களுக்கு கடமைப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications