வீரப்பன் மனைவி முத்துலட்சுமி திடீர் கைது-கர்நாடக போலீஸ் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

Muthulakshmi
மைசூர்: சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல வீரப்பனின் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக போலீசார் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்தனர்.

மாதேஸ்வரன் மலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்று அவரை மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

முத்துலட்சுமி மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் ஆர்.சி. பிளாண்ட் பகுதியில் வசித்து வருகிறார். மேட்டூர் கொளத்தூர் அருகே புதைக்கப்பட்டுள்ள வீரப்பனுக்கு அங்கு நினைவிடம் கட்ட சில நாட்களுக்கு முன் பூமி பூஜை நடத்தினார் முத்துலட்சுமி.

இந் நிலையில் நேற்றிரவு தனது தந்தை அய்யண்ணனுடன் இருந்த முத்துலட்சுமியை கர்நாடகா போலீசார் திடீரென கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.

பழைய வழக்குகளில் மைசூர் கோர்ட்ட பிறப்பித்த பிடிவாரண்ட் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கருமலைக்கூடல் காவல்நிலையத்திற்கு முத்துலட்சுமியை கொண்டு சென்ற கர்நாடகா போலீசார் பின்னர் மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கர்நாடகா போலீசார் தெரிவித்துள்ளனர்.

முத்துலட்சுமி சில வருடங்கள் காட்டில் வீரப்பனுடன் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் வீரப்பன் மீது பதிவான சில கொலை, கடத்தல் வழக்குகளில் முத்துலட்சுமியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகையில் முத்துலட்சுமி மீது கர்நாடகாவில் 5 வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்குகளில் விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கு விசாரணைகளில் முத்துலட்சுமி சரியாக ஆஜராகவில்லை. இதனால் அவர் மீது மைசூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதையடுத்தே அவரை கைது செய்து அழைத்து சென்றதாகத் தெரிகிறது.

ஆனால், ஒரு பெண்ணை பகலில் கைது செய்யாமல் இரவில் கைது செய்து அழைத்துச் சென்றது கேள்விகளை எழுப்பியுள்ளது.

முத்துலட்சுமி தவிர வீரப்பன் தொடர்பான வழக்குகளில் மேட்டூர், கொளத்தூர், சின்னதண்டா, பெரியதண்டா மற்றும் வீரப்பன் நடமாடிய காட்டுப் பகுதிகளில் வசித்த மலைவாழ் மக்கள் பலர் மீதும் கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்களைப் பிடித்து ஆஜர்படுத்தவும் மைசூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இவர்களைப் பிடிக்க கர்நாடகா போலீசார் இந்தப் பகுதிகளில் சாதாரண உடையில் சுற்றி கண்காணித்து வருகின்றனர்.

இதில் சிலரை அவர்கள் கைது செய்துள்ளதாகவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+