முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்தார்

77 வயதாகும் வி.பி.சிங்குக்கு புற்று நோய் தாக்கியிருந்தது. இதனால் நீண்ட காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் அவர் காலமானார்.
டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
வி.பி. சிங்குக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
1931ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங்.
இந்திய அரசியலில் புதிய சகாப்தம் படைத்தவர், திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இந்தியாவின் 10வது பிரதமராக அவர் பதவி வகித்தார். ஒரு வருட காலம் அவரது தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
இந்தியாவின் முதல் கூட்டணி ஆட்சியைக் கொடுத்த பெருமைக்குரியவர் வி.பி.சிங்.
உ.பி. முதல்வராக, இந்திரா, ராஜீவ் காந்தி அமைச்சரவையில், நிதித்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் அமைச்சர் பதவியை வகித்தவர் வி.பி.சிங்.
ராஜீவ் காந்திக்கு எதிராக புரட்சி செய்து காங்கிரஸிலிருந்து வெளியேறி ஜனதாதளம் என்ற கட்சியைத் தொடங்கினார். ராஜீவுக்கு எதிராக மாபெரும் அலையை உருவாக்கி மத்தியில் ஆட்சியைப் பிடித்தார். பாஜக-இடதுசாரிகள் துணையோடு கூட்டணி ஆட்சியை அமைத்தார்.
பின்னர் ஜனதாதளம் பல துண்டுகளாக சிதறிப் போய் விட்டது.
சிறந்த நிர்வாகியாக திகழ்ந்த வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக உரக்கக் குரல் கொடுத்தவர்.
சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் நல்ல கவிஞராகவும், ஓவியராகவும் திகழ்ந்தவர்.
புற்றுநோய், சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றால் கடந்த சில ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மீது ஆழ்ந்த மரியாதை கொண்ட வி.பி.சிங் முதல்வர் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர். டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் இவரை சந்திக்க கருணாநிதி தவறியதில்லை.
வி.பி.சிங் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தால் தனது இருக்கையை அவருக்குத் தந்துவிட்டு விருந்தினர் இருக்கையில் அமர்ந்து கொள்வார் கருணாநிதி. அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை தந்தவர் கருணாநிதி.
தமிழகத்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட வி.பி.சிங், மீண்டும் பிறந்தால் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுவதாகக் கூறியது நினைவுகூறத்தக்கது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பரி்ந்துரைத்த மண்டல் கமிஷனின் அறிக்கையை அமல்படுத்துவதில் முழு உறுதியுடன் இருந்து சாதித்துக் காட்டியவர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மனதில் வி.பி.சிங் நிரந்தரமாக இடம் பிடித்தார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications