மழை: உயிரிழந்தோருக்கு ரூ.1லட்சம் நஷ்ட ஈடு
சென்னை: தமிழகத்தில் சமீபத்திய மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலைக் கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன் பின்னர், தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இந்த பருவமழைக்கு தமிழகம் முழுவதும் இதுவரை 64 பேர் பலியாகி யுள்ளனர். 121 கால்நடைகளும் இறந்துள்ளன. 3089 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், எருமை, பசு, எருது போன்றவை பலியாகியிருந்தால் தலா ரூ.10,000, ஆடுகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்படுகிறது.
மழையால் மாநிலம் முழுவதும் 64,531 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 3028 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 17 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, 1681 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 20,700 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் சுமார் 50,000 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி யுள்ளன. தண்ணீர் வடிந்தவுடன் சேத மதிப்பு தெரிய வரும். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. நிவாரணத் தொகைக்காக அரசு சார்பில் ரூ.23 கோடி 34 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications