தாஜில் இன்னும் தீவிரவாதிகள்
மும்பை: தாஜ் ஹோட்டலில் இன்னும் சில தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர்.
தாஜ் ஹோட்டலில் இருந்த தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக நேற்று ராணுவம் கூறியது. ஆனால், அங்கு இன்றும் தீவிரவாதிகள் உள்ளே இருந்தபடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அங்கு இரண்டுக்கும் மேற்படட தீவிரவாதிகள் இருக்கலாம் எனத் தெரிகிறது. ஒருவன் படுகாயமடைந்த நிலையில் சுட்டுக் கொண்டுள்ளது மட்டும் உறுதியாகியுள்ளது.
அவன் மாடி மாடியாக இடம் மாறி வருவதால் அவனை கொல்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. அவனிடம் ஒரு ஆணும் பெண்ணும் பணயக் கைதிகளாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவனைத் தவிர மற்ற தீவிரவாதிகளும் அங்கு பதுங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
அங்கு மாடி மாடியாக என்எஸ்ஜி படையினர் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இன்று காலை 11.48 மணியளவில் முதலில் பயங்கர கிரனைட் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது.
ஹோட்டலில் இருந்து பாய்ந்து வந்த ஒரு குண்டு தாக்கி கீழே நின்றிருந்த ஒருவர் காயமடைந்தார். அதே போல எஎப்பி செய்தி நிறுவன போட்டோகிராபரும் குண்டடிபட்டு காயமடைந்தார்.
கமாண்டோக்களால் சுற்றி வளைக்கப்பட்ட தீவிரவாதிகள் வெளியே நோக்கி சுட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தாஜ் ஹோட்டலின் பின் புற வாசலில் இருந்து உள்ள கிடக்கும் உடல்களை போலீசார் இன்று அப்புறப்படுத்தினர்.
அந்த ஹோட்டலின் சில அறைகளில் இன்று மாலை மீண்டும் திடீரென குண்டுச் சத்தம் கேட்டது. இதையடுத்து தீயும் பிடித்துக் கொண்டது. இது கமாண்டோக்கள் தாக்கியதில் ஏற்பட்ட தீயாகக் கருதப்படுகிறது.
அதே போல இரவு 7.37 மணிக்கும் இன்னொரு குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தமும் தொடர்ந்து வருகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications