தீவிரவாதியின் செல்போன் சிக்கியது-பாக்.கிலிருந்து தொடர்ந்து போன் கால்கள்
மும்பை: ஹோட்டர் தாஜ் மஹாலில் புகுந்த தீவிரவாதி ஒருவனின் செல்போன் சிக்கியுள்ளது. ஹோட்டலுக்கு வெளியே இன்று காலை அந்த போன் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
தீவிரவாதிகள்,ஹோட்டலின் உட்புறமிருந்து கையெறி குண்டுகளை வீசி எறிந்தபோது ஒரு தீவிரவாதியிடமிருந்து இந்த செல்போன் நழுவி விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் இந்த செல்போனைக் கண்டுபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். இந்த போன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிலிருந்து பேசும் நபர்கள் பாகிஸ்தானிலிருந்து பேசுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த போன் எங்கு பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து பேசும் நபர்கள் எந்த ஊரிலிருந்து பேசுகிறார்கள் என்பது குறித்த விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.
இந்த போன் விசாரணைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் போலீஸார் நம்புகின்றனர்.
தாக்கியது லஷ்கர்: ரஷ்யா:
இதற்கிடையே, மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும், அல் கொய்தா அமைப்பினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ரஷ்ய ரகசிய போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு தகவல் தெரிவிக்கிறது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய செய்தி நிறுவனமான நோவோஸ்தியிடம் ரகசிய போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலுக்கும், அல் கொய்தா அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எங்களுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த கும்பல், பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல் கொய்தா முகாம்களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்.
இந்த குழுவை ஆரம்பத்தில் சாதாரணமாக இந்திய அரசு கருதியதே இப்படி ஒரு பெரும் சம்பவம் நடக்கக் காரணம்.
விசாரணை தொடர்பாக உதவி கேட்டு ரஷ்யாவின் ரகசிய போலீஸ் சேவையை இந்தியா இதுவரை கோரவில்லை என்றார் அவர்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications