மும்பை தாக்குதலில் தமிழக வங்கி அதிகாரி பலி
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.
மயிலாடுதுறையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கியின் வெளிநாட்டுப் பிரிவில் உதவிப் பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கொலாபாவில் உள்ள காபி டே போல்ட் ஹோட்டலுக்கு 3 நண்பர்களுடன் சாப்பிடச் சென்றார்.
அப்போது திடீரென அங்கு தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதையடுத்து ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் தரையில் படுத்துக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து கோபாலகிருஷ்ணன் எழுந்து பார்த்தபோது 2 தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் தலையில் குண்டு பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
இரவு 10.30 மணிக்கு அவரது செல்போனை நண்பர் சுரேஷ் என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது வேறு ஒருவர் அதை எடுத்து நடந்த சம்பவத்தை விளக்கினார். கோபாலகிருஷ்ணன் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனர். மகன் அமெரிக்காவில் படித்து வருகிறார். மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications