ஊரில் கோஷ்டி மோதல்-பள்ளிக்கு விடுமுறை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இரு கோஷ்டியினருக்கு இடையே கிராமத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடப்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள மேலசெக்காரகுடி மற்றும் கீழசெக்காரகுடி ஆகிய பகுதிகளில் இரு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் வசிக்கின்றனர்.
கீழசெக்காரகுடியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு நேற்று இரவு மேலசெக்காரகுடியை சேர்ந்த கோழிகடை மணி, பலவேசம், கருணாநிதி மற்றும் வெள்ளையன் ஆகியோர் மது அருந்திவிட்டு தகராறு செய்தனர். இதை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த கீழசெக்காரகுடி கண்ணன் தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கோழிக்கடை மணி கோஷ்டியினர் கண்ணனை சராமரியாக தாக்கினர்.
இதையடுத்து நேற்று காலை கீழசெக்காரகுடியை சேர்ந்த சிலர் கும்பலாக மேலசெக்காரகுடிக்கு சென்று அங்கிருந்த கருணாநிதியை தாக்கியதுடன் கோழிக்கடை மணிக்கு சொந்தமான வீட்டை தாக்கி ஓடுகளை அடித்த நொருக்கி்னர்.
இதனால் இரு தரப்பினர் மத்தியில் கடும் மோதல் உருவானது. இதில் கீழசெக்காரகுடியை சேர்ந்த ஆறுமுகம், கண்ணன் மற்றும் மேலசெக்காரகுடியை சேர்ந்த கருணாநிதி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஊரில் பதட்டம் நிலவியதால், அங்குள்ள அரசு பள்ளிக்கு விடு்முறை அளிக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications