'தான் திருடி, பிறரை நம்பாள்'-ஜெ மீது கருணாநிதி தாக்கு
சென்னை: இந்தியாவில் ஊழலுக்கென ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றால், அதை ஜெயலலிதாவுத்தானே தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: 'பிரதமரைச் சந்தித்து மத்திய அமைச்சர் ஆ.ராசாவை காப்பாற்றவே முதல்வர் டெல்லி பயணம்' என்று அகில இந்திய 'ஹாஸ்ய புகழ்' ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?
பதில்: "ராஜாவை மீட்பதற்காகத்தான் கருணாநிதி இப்போது டெல்லிக்கு போகிறார்'' என்று கம்பளத்தில் வடிகட்டிய ஒரு பொய்யை அம்பலத்தில் சொல்லி ஆட்டம் போடும் அம்மையார் ஜெயாவுக்கு சில கேள்விகள்:
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ஏலம் விடுகிற முறையை தவிர்த்து முதலில் விண்ணப்பிப்பவருக்கு வழங்குவது என்ற விதிமுறையை ஏற்படுத்தியது யார்?. அன்றைய பாஜக அமைச்சர் அருண் ஷோரி.
அதே விதிமுறை அடுத்து அந்தப் பொறுப்பில் இருந்த மந்திரி தயாநிதி மாறனாலும் கடைப்பிடிக்கப்பட்டதா இல்லையா? அவரை ராஜினாமா செய்யச் சொல்லி ஜெயலலிதா ஏன் அலறவில்லை?. அறிக்கை விடவில்லை?. அவர்கள் மீதெல்லாம் 'ராஜினாமா செய்' என்ற கணையைப் பொழியாமல் ராஜா மீது மட்டும் கண்மூடி தாக்குதல் நடத்துவதற்கு காரணம் என்ன?
கேள்வி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல் என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?
பதில்: 'தான் திருடி, பிறரை நம்பாள்' என்பது கிராமப்புற பழமொழி. வருமானத்தை விட அதிகமாக 64 கோடி ரூபாய்க்கு மேல் பதவியிலே இருந்தபோது சொத்து சேர்த்து அதற்கான வழக்கு தமிழக நீதி மன்றங்களிலே கூட அல்ல, பெங்களூர் நீதிமன்றம் வரை சென்று அங்கே பல ஆண்டு காலமாக வாய்தா வாங்கி,
அந்த இடைவெளியை காரணமாக கொண்டு ஜெயலலிதா அறிக்கை விடுத்தும், தொண்டர்களை ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லியும் காலம் கடத்தி வருகிறார் அல்லவா?.
இந்தியா முழுவதும் ஊழலுக்கென்று ஒரு விருது கொடுக்க வேண்டுமென்றால், அது ஜெயலலிதாவிற்கு தானே பொருந்தும்.
எத்தனை விதமான ஊழல் அவருடைய ஆட்சிக் காலத்தில்!. அவரா மத்திய அமைச்சர் ராஜாவை காப்பாற்ற நான் டெல்லி செல்கிறேன் என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் என்றும் அறிக்கை விடுவது? நான் பிரதமரை சந்திக்க செல்லும் போது தனியாக செல்லப் போவதில்லையே? அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்துக் கொண்டு தானே போகப்போகிறேன். அப்போது நான் பிரதமரிடம் ராஜாவிற்காக வக்காலத்து வாங்கிப் பேசுகிறேனா? அல்லது இலங்கை தமிழர்களுக்காக பேசுகிறேனா? என்பதை தெரிந்து கொள்ளலாமே!.
கேள்வி: இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக எந்தெந்த கட்சிகள் நிதி அளித்தன என்ற பட்டியலில் இலங்கை தமிழர்களுக்காக நான் தான் என்று எப்போதும் குரல் கொடுக்கும் மதிமுக சார்பிலோ, அதிமுக சார்பிலோ எந்த நிதியும் அளிக்கப்பட்டதாக தெரியவில்லையே?
பதில்: ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு சுனாமி ஏற்பட்ட போது, அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் திமுக சார்பில் மு.க. ஸ்டாலினை நேரில் அனுப்பி நிவாரண நிதியை வழங்க செய்தேன். அது திமுகவின் பண்பாடு. ஆனால் தற்போது திமுக ஆட்சியிலே இருக்கிறது என்ற காரணத்தால் அதிமுகவோ, மதிமுகவோ இலங்கை தமிழர் நிவாரண நிதி வழங்கவில்லை. இது அவர்களுடைய பண்பாடு. ஆனால் இலங்கை தமிழர்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார் என்பது உலக தமிழர்களுக்கும் தெரியும், இலங்கை தமிழர்களுக்கும் தெரியும்.
கேள்வி: பெட்ரோல் விலையை குறைக்க மறுப்பதா என்று கேட்டு சிபிஎம், சிபிஐ, பார்வர்டு பிளாக் கட்சிகள் டிசம்பர் 2ம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்களே?
பதில்: ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப் போவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தொடர்ந்து சொல்லி வருகிறார். அதற்கான கோப்பினை அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்புவதாக அந்தத் துறையின் செயலாளர் ஆர்.எஸ்.பாண்டே அறிவித்திருக்கிறார். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் இந்த கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக சொல்லியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications