இஸ்ரேலிய மருத்துவ குழு மும்பை விரைகிறது
ஜெருசலேம்: நாரிமன் ஹவுஸில் சிக்கி மீட்கப்பட்டு வரும் இஸ்ரேலியர்களுக்கு உதவுவதற்காக இஸ்ரேலிலிருந்து ஒரு மருத்துவக் குழு மும்பை விரைந்துள்ளது.
மும்பை நாரிமன் ஹவுஸ் இல்லத்தில் 15 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறத. இவர்களை மீட்க என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இன்று காலை கமாண்டோ படையினர் நாரிமன் ஹவுஸின் மாடியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேலியர்களுக்கு உதவுவதற்காக அந்த நாட்டிலிருந்து மருத்துவ குழு ஒன்றை மும்பை கிளம்பியுள்ளது. இந்தக் குழுவில் டாக்டர்கள், நர்சுகள், பிற குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.
மும்பையில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் படையினருக்கு இவர்கள் உதவியாக இருப்பார்கள். இஸ்ரேல் அரசே முன்வந்து இந்த மீட்பு மற்றும் உதவிக் குழுவை அனுப்பியுள்ளது.
காயமடைந்த இஸ்ரேலியர்களுக்கும், பிறருக்கும் இந்தக் குழுவினர் சிகிச்சை அளிப்பார்கள். காணாமல் போயுள்ள இஸ்ரேலியர்களைக் கண்டுபிடிக்க இந்திய அதிகாரிகளுக்கு உதவுவார்கள். மேலும் காயமடைந்த இஸ்ரேலியர்கள் உடனடியாக நாடு திரும்பவும் இக்குழுவினர் ஏற்பாடு செய்வார்கள்.
முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுத் பாரக் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஸிபி லிவ்னி ஆகியோர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுடன் தொலைபேசியில் பேசினர்.
மிகக் கொடூரமான இந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திலிருந்து அப்பாவிமக்களை மீட்க இந்திய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். இஸ்ரேல் அரசு அனைத்து வகையிலும் இந்தியாவுக்கு உதவ காத்திருப்பதாகவும் உறுதியளித்தனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications