தீவிரவாதியின் பேச்சை ஒளிபரப்பிய டிவி நிறுவனத்துக்கு நோட்டீஸ்
டெல்லி: நாரிமன் ஹவுஸைப் பிடித்து வைத்திருந்த தீவிரவாதியுடன் நடத்திய பேச்சை ஒளிபரப்பிய 'இந்தியா டிவி' நிறுவனத்திற்கு மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிசம்பர் 1ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நாரிமன் ஹவுஸை தீவிரவாதிகளிடமிருந்து மீட்க என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தபோது, இந்தியா டிவியில், நாரிமன் ஹவுஸில் இருந்த தீவிரவாதி ஒருவனின் பேட்டி ஒளிபரப்பானது.
இதுகுறித்து தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், இது தீவிரவாதிகளின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்ல உதவும் செயலாகும்.
இதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுளளது. தீவரவாதத்தை ஊக்குவிக்கும் வகையி்ல் அமைந்துள்ளது. இதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வாய்ப்பும் ஏற்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே என்.எஸ்.ஜி. படையினரின் பணிகளில் ஊறு விளைவிக்கும் வகையில் நேரடி ஒளிபரப்புகளையோ அல்லது வேறு மாதிரியான செய்திகளையோ டிவி நிறுவனங்கள் ஒளிபரப்பக் கூடாது என செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இருப்பினும் இந்தியா டிவி ஒளிபரப்பிய தீவிரவாதியின் பேச்சிலிருந்து அவனுடைய உச்சரிப்பு உள்ளிட்ட சில முக்கிய விவரங்களை பாதுகாப்புத்துறை நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications