பாக் உளவு அமைப்பின் ஐஎஸ்ஐயின் அரசியல் பிரிவு மூடல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் அரசியல் பிரிவை மூடி விட்டதாக அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் அரசியல் பிரிவை மூட வேண்டும் என நீண்ட நாட்களாக இருந்து வந்த கோரிக்கையை ஏற்று அதை மூட பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஐஎஸ்ஐயின் செயல்பாடுகள் இனி மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானில் கிலானி தலைமையில் அமைந்த அரசு 2 மாதங்களுக்கு முன்பு, ஐ.எஸ்.ஐ.யை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சித்தது. ஆனால் ராணுவத்திடமிருந்து அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது ஐ.எஸ்.ஐ.யின் அரசியல் பிரிவை பாகிஸ்தான் அரசு மூடி விட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசின் கொள்கைகளில் பெரும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ,யின் அரசியல் பிரிவு, கடந்த 30 வருடங்களாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு அரசியல் குழப்பப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
உள்நாட்டு அரசியலில் அரசியல் கூட்டணிகளை உடைப்பது, கட்சிகளை கூட்டணி சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் அது ஈடுபட்டு வருகிறது.
கடந்த 1988ம் ஆண்டு, பெனாசிர் பூட்டோவுக்கு எதிராக இஸ்லாமி ஜமூரி இதிஹாத் என்ற கூட்டணியை உருவாக்க ஐ.எஸ்.ஐதான் உதவியது.
அதேபோல, 2002ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு சாதகமாக பல வேலைகளில் ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டது. நவாஸ் ஷெரீப் தலைமையில் இருந்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கை உடைத்து, ஒரு பிரிவை முஷாரப்பிடம் கொண்டு போய் சேர்த்தது ஐ.எஸ்.ஐதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டு வரும் அரசியல் பிரிவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று கிலானி அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்தே அந்த நடவடிக்கையில் கிலானி ஈடுபட்டார்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஐ.எஸ்.ஐ.யை தீவிரமாக ஈடுபடுத்த கிலானி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கே கேள்விக்குறியாக உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications