மும்பை தாக்குதல் விசாரணை: இந்தியாவுக்கு முழு ஆதரவு - புஷ் உறுதி
வாஷிங்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவும், உதவிகளையும் அளிக்கும் என்று அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேங்க்ஸ் கிவிங் தினத்தையொட்டி விடப்பட்ட விடுமுறையைக் கழிப்பதற்காக, கேம்ப் டேவிட்டுக்கு மனைவி லாராவுடன் சென்றிருந்தார் புஷ்.
அங்கிருந்தபடி அவர் மும்பை தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவை இந்தியா முழுமையாக நம்பலாம். இந்தியாவுக்குத் தேவையான உதவிகளையும், முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும். இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.
இந்த மாபெரும் துயரத்தை இந்தியா நிச்சயம் தாங்கிக் கொள்ளும், சமாளித்து எழுந்து நிற்கும். தீவிரவாதத்திற்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது என்று கூறியுள்ளார்.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்ட், மும்பையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் பால் போல்ம்ஸ்பீ மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை சம்பவம் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார் புஷ்.
பின்னர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார் புஷ். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்புடன் உள்ளனர் என்பதை உறுதி செய்யும் வகையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவுக்கும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு, அமெரிக்கா முழு அளவில் உதவிகளைச் செய்யும். தவறு செய்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அமெரிக்கா உதவி செய்யும்.
மும்பையில் நடத்திய தீவிரவாதிகளின் தாக்குதல் மிகக் கொடுமையானது, கொடூரமானது. ஆனால் தீவிரவாதத்திற்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது.
இந்திய மக்கள் மிகவும் உறுதியானவர்கள். மிக வலுவான, பல இனங்களைக் கொண்ட, உறுதியான ஜனநாயகத்தை கடைப்பிடித்து வரும் நாடு இந்தியா. இந்த துயரத்தை இந்திய மக்கள் எளிதாக சமாளிப்பார்கள் என்றார் புஷ்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications