உள்துறை அமைச்சர்-மனமில்லாமல் ஏற்ற ப.சிதம்பரம்?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்கிறேன் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதன் மூலம அவர் புதிய பொறுப்பை ஏற்பதில் அதிருப்தியுடன் உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக்கப்பட்டுள்லார்.
இந்த நிலையில், இன்று அவர் நிதியமைச்சராக கடைசி செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், புதிய பொறுப்பை நான் விரும்பி ஏற்பதாக கூற விரும்பவில்லை. ஆனால் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எடுத்த இறுதி முடிவு. எனவே இதை ஏற்கிறேன்.
எனது அரசியல் வாழ்வில் நான் எதிர்பாராத நிகழ்வு இது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து திருப்திகரமான பாதையில் செல்லும். பண வீக்கம் மட்டுப்படும்.
நான்கு ஆண்டு திருப்திகரமான வளர்ச்சிக்குப் பின்னர், இந்த ஆண்டை நிகழ்வுகள் குறைந்த ஆண்டாக எதிர்பார்த்தேன். ஆனால் எனது அரசியல் வாழ்க்கையிலேயே நான் மிக அதிகமான நிகழ்வுகளை ( பணவீக்கம், விலைவாசி உயர்வு) சந்தித்த ஆண்டாக இது அமைந்து விட்டது.
நிதியமைச்சகத்தில் நான் செய்ய வேண்டிய வேலைகள் சில பாக்கி உள்ளன. இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், பணவீக்கம் விரைவில் மட்டுப்படும். பொருளாதார வளர்ச்சி திருப்திகரமான வகையில் இருக்கும்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பிரதமர் இருந்துள்ளார். திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்துள்ளார். நிதியமைச்சராகவும் இருந்துள்ளார்.
நிதியமைச்சகத்தில் இந்த மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவர் இந்த மூன்று பொறுப்புகளையும் வகித்துள்ளார். இதனால் நிதித்துறையை கவனிக்க இவரை விடச் சிறந்தவர் யார் இருக்கிறார்கள் என்றார் ப.சிதம்பரம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications