எடுத்த எடுப்பிலேயே..சென்செக்ஸ் வீழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியதுமே சென்செக்ஸ் 325 புள்ளிகள் வீ ழ்ந்தது. அதேபோல நிப்டியும் 2600 புள்ளிகளுக்குக் கீழ் போனது.

தொடர்ந்து 2வது நாளாக பங்கு வர்த்தகத்தில் வீழ்ச்சி காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே சென்செக்ஸ் 325 புள்ளிகள் வீழ்ந்தது. உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக மும்பை பங்குச் சந்தையிலும் சென்செக்ஸ் வீழ்ச்சி ஏற்பட்டது.

நேற்று 252.85 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ் இன்று 325.39 புள்ளிகள் குறைந்தது.

அதேபோல, தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 101.20 புள்ளிகள் குறைந்து 2582.70 புள்ளிகளாக இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையி்ல் ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் காரணம் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் டோஜோன்ஸ் இன்டெக்ஸ் 7.70 சதவீதமாக குறைந்துள்ளது.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியாக டோ ஜோன்ஸ் வீழ்ச்சி முகமாக உள்ளது.

இதே நிலைதான் ஆசிய பங்குச் சந்தைகளிலும் காணப்படுகிறது. ஹாங்காங் பங்குச் சந்தையில் 4.89 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 4.60 சதவீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் பயமே இந்த வீழ்ச்சிக்கு காரணம்.

இன்று ரிலையன்ஸ், ஏசிசி, ரிலையன்ஸ் இன்பிரா, ஆர்.காம், இன்போசிஸ், சத்யம், டாடா கன்சல்டன்சிஸ், விப்ரோ, எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, லார்சன் டூப்ரோ, பெல், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+