2007-08: காபி ஏற்றுமதியில் 2.9% சரிவு
டெல்லி: 2007-08ம் ஆண்டு காலத்தில் உலக காபி ஏற்றுமதியில் 2.9 சதவீத சரிவு காணப்பட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு விற்பனை அளவும் 4.31 சதவீதம் குறைந்து காணப்பட்டது.
2007-8ம் ஆண்டில், உலகளவில் 9.51 கோடி 'பேக்' காபி ஏற்றுமதியாகியுள்ளன. இந்தியாவின் வெளிநாட்டு விற்பனை அளவு இதே காலகட்டத்தில் 20.4 லட்சம் பேக் காபி ஆகும். ஒரு பேக் என்பது 60 கிலோ காபி அடங்கியது.
2006-07ம் ஆண்டில், உலக அளவிலான காபி ஏற்றுமதியின் அளவு 9.79 கோடி பேக்குகளாக இருந்தன.
2007-08ம் ஆண்டில், அரபிகா வகை காபி ஏற்றுமதியின் மொத்த அளவு 6.25 கோடி பேக்-களாக இருந்தது. ரொபஸ்டா வகை காபியின் ஏற்றுமதி ஏஅளவு 3.26 கோடி பேக்-களாக இருந்தது.
உலக அளவில் காபி ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா. இந்தியாவிலிருந்து 2007-08ம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதத்தில், 10.7 லட்சம் பேக் ரொபஸ்டா காபியும், 7 லட்சத்து 40 ஆயிரம் பேக், சாதாரண வகை காபியும் ஏற்றுமதியாகியுள்ளன.
உலகின் முன்னணி காபி ஏற்றுமதியாளரான பிரேசிலில் காபி ஏற்றுமதியின் அளவு 4.17 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
2வது இடத்தில் உள்ள தான்சானியா 7.82 சதவீத வீழ்ச்சியும், 3வது நாடான காமரூனில் 23.13 சதவீத வீழ்ச்சியும் காணப்பட்டது.
ஆனால், பாபுவா நியூகினியா, உகாண்டா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காபி ஏற்றுமதியின் அளவு 36 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.












Click it and Unblock the Notifications