மாலேகான்: தயானந்த பாண்டேவுக்கு டிச. 12 வரை சிறைக் காவல்
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான தயானந்த பாண்டேவை டிசம்பர் 12ம் தேதி வரை சிறையில் அடைக்க, மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலேகான் குண்டுவெடி்பு தொடர்பாக கான்பூரில் வைத்து பாண்டேவை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும், உ.பி. போலீஸாரும் சேர்ந்து கைது செய்தனர்.
விசாரணையில் அவருக்கும் இதே வழக்கில் கைதாகியுள்ள பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் ஆகியோருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், பாண்டேவை, மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழும் போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து நேற்று மும்பையில் உள்ள இதற்கான சிறப்பு கோர்ட்டில் ஏ.டி.எஸ் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அப்போது பாண்டேவின் வழக்கறிஞர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், போலீஸ் கஸ்டடியில் பாண்டே இருந்தபோது அவரை சந்திக்க தன்னை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி ஷிண்டே, பாண்டவை டிசம்பர் 12ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications