ஏடிஎஸ் தலைவர் கர்கரே வீட்டிற்கு பிரதீபா விஜயம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, வீர மரணம் அடைந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே வீட்டுக்கு இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சென்று கர்கரே படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இந்தோனேசியாவுக்கு சென்றிருந்த பிரதீபா பாட்டீல் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நேற்று மும்பைக்கு வந்தார்.
பின்னர் மத்திய மும்பையில் உள்ள காவல் அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள கர்கரே வீட்டுக்கு அவர் சென்றார்.
அங்கு கர்கரேவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் வீரமரணம் அடைந்த என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலேஷ்கரின் வீட்டுக்கும் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications