கோவையில் 3 பேர் கைது-தீவிரவாதிகளா?

மும்பையில் சில தினங்களுக்கு முன்பு பாக். தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டல் உட்பட முக்கிய இடங்களில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்ப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவையில் ஒரு பிரபல விடுதியில் வெளி மாநில இளைஞர்கள் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கோவை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், அதிரடிப்படையினர் கோவை நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
லங்கா கார்னர் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒரு அறையில் 3 பேர் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் ஹோட்டலை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி முனையில் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கோவை நகர வரைபடம், ஒரு டைரி, 4 செல்போன்கள், 2 வில்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் கோவை நகரிலுள்ள முக்கிய இடங்கள், செல்போன் எண்கள் இருந்தன. அவர்கள் வைத்திருந்த செல்போனை சோதனையிட்ட போது துபாய் மற்றும் அரபு நாடுகளுக்கு பேசியிருப்பது தெரியவந்தது.
கோவை நகரை தகர்க்கும் சதித்திட்டத்துடன் அவர்கள் கோவை வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணையில் அவர்கள், சம்சுதீன் (23), இர்பான் அகமது (20), அப்துல் தமீம் (21) என தெரிய வந்தது. மூன்று பேரும் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள்.
கோவை உள்ள ரெயில் நிலையம், விமான நிலையம், கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், தலைமை டெலிபோன் அலுவலகம், அரசு மருத்துவமனை, உயரமான கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய இடங்களுக்கு சென்று கண்காணித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் மேல் விசாரணை நடத்துவதற்காக சென்னையில் இருந்து போலீஸ் அதிகாரிகள் குழு கோவை விரைந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications