கேட்டது நிவாரணம்-கிடைத்தது துப்பாக்கிச் சூடு!
திருவாரூர்: நிவாரணம் கேட்டு மறியல் செய்த பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை திருவாரூர் அருகே உள்ள முத்துப்பேட்டை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமிற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் வருகை தந்த போது அவரை முற்றுகையிட்ட மக்கள் தங்களுக்கு முறையான உணவு, குடி நீர் போன்றவை கூட தரப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் மருதங்காவெளித் தெருவில் உள்ள வீடுகள் இடிந்துள்ளதாகவும், அங்கு வெள்ளம் வடியவில்லை என்றும் கூறினர்.
இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மூலம் உரிய தீர்வு காணப்படும் என்று அமைச்சர் மதிவாணன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சரின் பேச்சில் சமாதானம் அடையாத பொது மக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி மீது அலுவலகம் மீது பொது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், பேரூராட்சித் தலைவர் கார்த்திக் வீட்டையும் கற்கள் வீசி தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்ததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் அங்கிருந்த பொது மக்கள் அலறி சிதறி ஓடினர். இந்த சம்பவம் காரணமாக முத்துப்பேட்டையில் பரபரப்பு நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications