மதுரை-அரசு கல்லூரி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்!
மதுரை: அரசு கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களுக்கு ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மதுரை மற்றும் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசுக் கலைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களுக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.
ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தின் செல்போன், டேட்டா கார்டு போன்ற தொழில்நுட்ப கருவிகளை மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மார்க்கெட்டிங் செய்ய விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
மாத வருமானம் ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை கிடைக்கும். பட்டதாரிகள் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமை சென்னை கல்லூரி கல்வி இயக்குனரக வேலை வாய்ப்பு பிரிவு நடத்துகின்றது.












Click it and Unblock the Notifications