மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட கஸாவ்

Subscribe to Oneindia Tamil

Kasav
மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்தி கைதான அப்துல் அமிர் கஸாவை போலீசார் இன்று காலை மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு சென்றதை சில டிவி கேமராக்கள் படம் பிடித்துவிட்டன.

ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கஸாவை ஒரு மருத்துவமனைக்கு மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் கொண்டு வந்தனர். இந்தத் தகவல் யாருக்கும் தெரியாது. எப்போது அவன் கொண்டு வரப்பட்டான் என்றும் தெரியவில்லை.

அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இன்று காலை அவன் ஒரு குவாலிஸ் காரில் மீண்டும் ரகசிய இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

அவனது முகம் துணியால் மூடப்பட்டிருந்தது. சுற்றிலும் போலீசார் அமர்ந்திருந்தனர். முழுவதும் கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்த அந்தக் காரில் அவன் இருந்ததை சில டிவி நிருபர்கள் படம் பிடித்துள்ளனர்.

உயிரோடு பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கஸாவ் காரில் கொண்டு செல்லப்பட்டபோது பெரிய அளவில் பாதுகாப்பு ஏதும் இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. அவனது உயிருக்கு தீவிரவாதிகளாலே ஆபத்து உள்ளது குறிப்பிடத்த்தது.

மேலும் ஒரு குண்டு கண்டுபிடிப்பு:

இந் நிலையில் தாக்குதல் நடந்து 6 நாட்களுக்குப் பின் நேற்றிரவு மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் ஒரு வெடிக்காத ஆர்டிஎக்ஸ் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் எங்கெல்லாம் குண்டுகள் கிடக்கிறதோ என்ற அச்சம் பரவியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+