தீவிரவாதிகள்-பாகிஸ்தானுக்கு யுஎஸ் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Mullen
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தீவிரவாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் நாட்டு அரசிடம் அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தளபதி (US Joint Chiefs of Staff) அட்மிரல் மைக்கேல் முல்லன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தானிடையே ராணுவ மோதல் வரலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது. இதையடுத்து இரு தரப்பிலும் அரசியல் மற்றும் ராணுவ தலைமையுடன் பேச்சு நடத்த முல்லன் விரைந்தார்.

இரு நாடுகளிடமும் போர்த் திட்டம் ஏதும் உள்ளதா என்பதை அறிவதும், அதைத் தவிர்ப்பதுமே இவரது பயணத்தின் முக்கிய நோக்கம்.

முதல் கட்டமாக இஸ்லாமாபாத் வந்த அவர் அதிபர் சர்தாரி, அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூத் துர்ரானி, முப்படைகளின் தலைவர்கள், ஐஎஸ்ஐ தலைவர் ஆகியோருடன் நேற்று அவர் பேச்சு நடத்தினார்.

அப்போது இந்தத் தாக்குதலில் ஐஎஸ்ஐக்கும் உள்ள தொடர்பு குறித்து முல்லன் சில ஆதாரங்களை முன் வைத்ததாகத் தெரிகிறது. அப்பேீது ஆப்கானிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்காவுக்கு எப்படியெல்லாம் உதவுகிறோம் என்று பாகிஸ்தான் தரப்பு விளக்கியது.

ஆனால், இதில் திருப்தியடையாத முல்லன் எல்லைப் பகுதியில் மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரவாதிகளை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மும்பை விசாரணைகளில் இந்தியாவுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து முல்லன் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மன்மோகன் சி்ங், வெளியுறவு அமைச்சர் பிரணாப், உள்துறை அமைச்சர் சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, முப்படைத் தளபதிகளுடன் அவர் பேசுவார் எனத் தெரிகிறது.

இதற்கிடையே வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், இந்த விஷயத்தில் இந்தியாவின் கோபத்தை அமெரிக்கா முழுமையாக உணர்ந்துள்ளது. அவர்கள் கொஞ்சம் பொறுமை காட்ட வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்த் தரப்பின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தர அமெரிக்கா அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+