மும்பை: ஐ.எஸ்.ஐக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கின
டெல்லி: மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்தவர்கள் யார், எந்தெந்த இடத்தில் பயிற்சி வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அரசுக்குக் கிடைத்துள்ளது.
அமெரிக்காவிடம் கூடுதல் ஆதாரங்கள்
அதேசமயம், இந்தியாவை விட அமெரிக்காவுக்கு கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளதாம். லஷ்கர் இ தொய்பா அமைப்பை இந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தும் முக்கிய ஆதாரங்களும், ஐஎஸ்ஐயின் தொடர்பை அம்பலப்படுத்தும் ஆதாரங்களும் அமெரிக்காவிடம் கிடைத்துள்ளது.
நேற்று முன்தினம் அமெரிக்க துணைத் தளபதி மைக் முல்லன் இஸ்லாமாபாத் சென்றிருந்தபோது, மும்பை சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதற்கான போதுமா ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும். இனியும் பாகிஸ்தான் இந்த விஷயத்தில் மறுப்பு தெரிவிக்க முடியாது என அவர் பாகிஸ்தானுக்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
பாக். அரசுக்குத் தொடர்பில்லை!
மிக மிக தெளிவாக திட்டமிட்டு இந்த செயலை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் முழு அளவில் பயிற்சி அளித்துள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளித்தது குறித்து ராணுவத்திற்குத் தெரியாது என்று கூறினால் அதை நம்புவது கடினம் என்று கூறும் அரசு வட்டாரம், பாகிஸ்தான் அரசுக்கு இந்த சதிச் செயலில் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கிறது.
சர்தாரியிடம் முழு அளவில் அதிகாரம் இல்லை என்பதும், அவருக்கும், ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐக்கும் இடையே யார் பெரியவர் என்ற சண்டை தீவிரமாக இருப்பதாகவும் அரசுத் தரப்பு தெரிவிக்கிறது.
புரட்சிக்கு திட்டமிட்ட ராணுவம்
இன்னும் தாங்கள்தான் பெரியவர்கள் என்று பாகிஸ்தான் அரசுக்கு நிரூபிக்கும் வகையில், மும்பையில் வெறியாட்டத்தை ராணுவம், ஐ.எஸ்.ஐயின் துணையுடன் நடத்தியிருக்கிறது.
மேலும், இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதட்டம் ஏற்பட்டிருந்தால், அதைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கவும் ராணுவம் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மும்பை போலீஸாரிடம் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கஸாவ், விசாரணையின்போது ஐ.எஸ்.ஐக்கும், தங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து புட்டுப் புட்டு வைத்துள்ளான் என்பது நினைவிருக்கலாம்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications