புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த இந்தியா சொல்லாது: இலங்கை
கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் இலங்கை நடத்தி வரும் போரை நிறுத்துமாறு இந்திய அரசு கேட்டுக் கொள்ளாது என்று இலங்கை அமைச்சரும், சுதந்திரா கட்சி பொதுச் செயலாளருமான மைத்திரிபால் சிறிசேனா கூறியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் 22 பேரும் இந்திய பிரதமரை சந்தித்துப் பேசினாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை அரசு ஒருபோதும் நிறுத்தாது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரை நிறுத்துமாறு இந்திய அரசு ஒருபோதும் வேண்டுகோள் விடுக்காது. அரசின் நிலைப்பாடுகள் குறித்து இந்திய அரசுக்கு எடுத்துக் கூறியுள்ளோம்.
விடுதலைப்புலிகள் தற்போது பலவீனமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு போரை நிறுத்தாது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு பேச்சுக்கு வருவதுதான் விடுதலைப்புலிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே வழி என்றார் அவர்.
இதேபோல, புலிகளுடன் நடத்தி வரும் போரை நிறுத்துமாறு அரசைக் கேட்டுக் கொள்ள மாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியும் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, லக்ஸ்மன் செனவிரட்ன ஆகியோர் நாடாளுமன்றதத்தில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தனர்.
அதில் உரையாற்றிய லக்ஸ்மன் கிரியெல்ல, பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும்.
பயங்கரவாதிகளை அழிப்பதற்கான போரை தொடர வேண்டும் என்றார்.
லக்ஸ்மன் செனவிரட்ன பேசுகையில், போரை நடத்துங்கள் பயங்கரவாதத்தை ஒழியுங்கள் அதற்கு ஆதரவு தருகின்றோம். படையினரின் வெற்றியை குறைத்து மதிப்பிடவில்லை.
அதேவேளையில், அரசியல் தீர்வு குறித்தும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications