ஆம்பூரில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு - பதற்றம்
ஆம்பூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் உடைத்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மந்தகரையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் இந்த சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதில் சிலையின் இடது கை உடைக்கப்பட்டுள்ளது.
காலையி்ல் கண் விழித்துப் பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தர். சிலை உடைக்கப்பட்ட தகவல் அருகில் உள்ள ஊர்களுக்கும் பரவவே, அங்கு அதிமுக நிர்வாகிகள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
இதனையடு்த்து எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்பூர் காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் புகார் செய்தனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications