போர்ட், மாருதி, ஹூண்டாய் கார் விலைகள் குறைப்பு

பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஃபோர்டு, ஹூண்டாய், மாருதி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்றவை தங்களின் பிரபல பிராண்டுகளின் விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளன .
குறைப்பாக ஃபோர்டு நிறுவனம் தனது பியஸ்டா 1.6 இஎக்ஸ் ஐ ரக கார்களுக்கு ரூ.91 ஆயிரம் வரை விலையைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை ரூ.6.20 லட்சமாக இருந்த இந்தக் கார்கள் இப்போது ரூ.5.29 லட்சத்துக்கு விற்கப்படுகின்றன. ஆனால் இந்தக் குறைப்பு பெட்ரோலில் ஓடும் பியஸ்டா கார்களுக்கு மட்டும்தான் பொருந்தும். டீஸல் கார்களுக்கு ரூ.51 வரை விலைக் குறைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாயும் தனது சாண்ட்ரோ ஜிஎல் (ரூ.24 ஆயிரம்), அசெண்ட் (12,000), வெர்னா (ரூ.24 ஆயிரம் மற்றும் 12,000) கார்களுக்கு விலைக்குறைப்பை அறிவித்துள்ளது (குறைக்கப்பட்ட தொகை அடைப்புக் குறிக்குள்).
மாருதி நிறுவனம் தனது வேகன் ஆர் ரக கார்களுக்கு ரூ.35 ஆயிரம் விலை குறைத்துள்ளது. ஆல்டோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்விப்ட் டிசைர் ரக கார்களுக்கும் விலைக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு என்பது அறிவிக்கப்படவில்லை.
டாடா நிறுவனம் தனது இண்டிகா ரக கார்களுக்கு ரூ.30 ஆயிரமும், இண்டிகோ எக்ஸல் சிஎஸ் ரகத்துக்கு ரூ.40 ஆயிரமும், சுமோவுக்கு ரூ.65 ஆயிரமும் குறைக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸின் ஸ்பார்க் மற்றும் ஏவியோ ரக கார்களுக்கு முறையே ரூ.58 ஆயிரமும், ரூ.53 ஆயிரமும் குறைக்கப்பட்டுள்ளது.
மற்ற கார் நிறுவனங்களும் விலைக் குறைப்பை அறிவிக்க உள்ளன.
ஒரு பக்கம் பெட்ரோல், டீஸல் விலைக் குறைப்பு, அடுத்த நாளே கார் விலைக் குறைப்பு என மக்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கிடைத்து வந்தாலும், பறிக்கப்படும் வேலைவாய்ப்புகள் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு போன்றவை அந்த மகிழ்ச்சியை அர்த்தமில்லாமல் செய்து வருகின்றன.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications