பாக். தீவிரவாத முகாம்களை தாக்கி அழிக்க வேண்டும்: பாபர் மசூதி கமிட்டி
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கி அழிக்க உடனடியாக ராணுவத்தை அனுப்ப குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட வேண்டும். இதில் இனியும் நாம் பொறுமை காக்கக் கூடாது என அகில இந்திய பாபர் மசூதி மறு சீரமைப்பு கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி கமிட்டியின் தலைவர் முகம்மது யூனிஸ் சித்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் உள்ள மக்கள் தினசரி செத்து செத்துப் பிழைக்கிறார்கள். இத்தனைக்கும் காரணம் பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டு வரும் தீவிரவாதிகள்தான். இதற்கு ஒரே முடிவு, அங்குள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களை அழிப்பதுதான்.
பாகிஸ்தானில் உள்ள அத்தனை தீவிரவாத முகாம்களையும் அழிக்க ராணுவத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட வேண்டும். உடனடியாக இதை அவர் செய்ய வேண்டும். இனியும் இதில் நாம் பொறுமையாக இருக்க முடியாது. இதுதான் நமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு.
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், அதற்கு இந்திய முஸ்லீம்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தருவார்கள். உறுதியுடன் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
துக்க தினம் கிடையாது
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பலியான குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பாபர் மசூதி இடிப்பின் 16வது நினைவு நாளையொட்டி துக்க தினம் கடைப்பிடிக்கப்பட மாட்டாது. மேலும், எந்தவிதமான போராட்டமும் நடத்தப்பட மாட்டாது.
இருப்பினும் அயோத்தியில்,அதே இடத்தில் மீண்டும் பாபர் மசூதியைக் கட்ட வேண்டும் அல்லது ராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்சினையை உச்சநீதிமன்றத்திற்கு விட வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்படும்.
சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பளித்தாலும் அதை முஸ்லீம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நீதித்துறை மீதும், சட்டம், ஒழுங்கின் மீதும் முஸ்லீம் சமுதாயம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது என்றார் சித்திக்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications