பெட்ரோல் ரூ. 5, டீசல் ரூ. 2 விலை குறைப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படு வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதையடுத்து ஏற்றப்பட்ட பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என அனைத்துத் தரப்பிலிருந்தும கோரிக்கை எழுந்தது.
ஆனால் இப்போதைக்கு குறைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு கூறி வந்தது. பிரதமரும், இப்போது குறைக்க முடியாது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வந்ததால், விலைக் குறைப்புக்கு மத்திய அரசு தீர்மானித்தது.
6 மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர், அதாவது டிசம்பர் 11ம் தேதிக்கு மேல் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை கூடி பெட்ரோலியப் பொருட்களின் விலைக் குறைப்பு குறித்து ஆலோசித்தது. இதன் முடிவில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்படுகிறது. இந்த கட்டணக் குறைப்பு நள்ளிரவு (நேற்று) முதல் அமலுக்கு வருகிறது.
இது ஒரு இடைக்கால நடவடிக்கை. மேலும் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியை அரசு தொடர்ந்து கண்காணித்து வரும். அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இருப்பினும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. அடுத்த பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பின்போது சிலிண்டர் விலை குறைக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
எந்த ஊரில் என்ன விலை?
விலைக் குறைப்புக்குப் பின்னர் எந்த ஊரில் பெட்ரோல், டீசல் என்ன விலை என்ற விவரம்.
குட்டிப் பிரதேசமான புதுச்சேரியில்தான் பெட்ரோல், டீசல் விலை மிகவும் குறைவு. அடுத்து டெல்லியில் குறைவு.
டெல்லி:
பெட்ரோல் - ரூ. 45.62
டீசல் - ரூ. 32.86
சென்னை:
பெட்ரோல் - ரூ. 49.66
டீசல் - ரூ. 34.98
மதுரை:
பெட்ரோல் - ரூ. 49.92
டீசல் - ரூ. 35.55
கோவை:
பெட்ரோல் - ரூ. 49.69
டீசல் - ரூ. 35.30
திருச்சி:
பெட்ரோல் - ரூ. 49.80
டீசல் - ரூ. 35.43
சேலம்:
பெட்ரோல் - ரூ. 49.82
டீசல் - ரூ. 35.44
திருநெல்வேலி:
பெட்ரோல் - ரூ. 49.72
டீசல் - ரூ. 35.34
புதுச்சேரி:
பெட்ரோல் - ரூ. 43.30
டீசல் - ரூ. 33.42
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
பெட்ரோல் 1 லிட்டர் வெறும் 82 ரூபா.. மத்திய அரசு அறிமுகம் செய்த E85 வகை.. உங்கள் வண்டியில் ஊற்றலாமா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications