ஆட்டோவில் ஆபாச படம் காட்டிய டிரைவர் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்லங்கோடு: கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் ஆபாசப் படத்தைப் போட்ட ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமா நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் நித்திரவிளை அருகேயுள்ள சின்னதிரை கடற்கரை கிராமத்தில் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவரது ஆட்டோவில் டிவி பொருத்தி ஆதில் டிவிடி பிளேயர் மூலம் சிடிக்களை போட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு காட்டுவதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா சம்பவ இடம் விரைந்து சென்று ஆட்டோவை சோதனை செய்தார்.
அப்போது ஆட்டோவி்ல் டிவி பொருத்தி இருப்பதும், டிவிடி பிளேயர் வைத்திருப்பதும் தெரிய வந்தது. மேலும் ஆட்டோவில் இருந்த 2 ஆபாச சிடிக்களை போலீசார் கைப்பற்றி பால்ராஜை கைது செய்து ஆட்டோவுடன் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.












Click it and Unblock the Notifications