யுஎஸ் மிரட்டல்-நடவடிக்கையில் இறங்கிய பாக்-லஷ்கர் 'கமாண்டர்' லக்வி கைது?

அங்குள்ள லஷ்கர் இ தொய்பா முகாமில் வைத்து லக்வியை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ள சிலரில் லக்வி என்ற பெயரில் ஒருவர் இருப்பதாக மட்டும் தகவல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் கடும் மிரட்டலைத் தொடர்ந்து மும்பைத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் சம்மதித்தது. இதையடுத்து முஸாபராபாத்தில் உள்ள லஷ்கர் அலுவலகம், அதன் கிளையான ஜமாத் உத் தாவா ஆகிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் திடீர் வேட்டையில் இறங்கினர். முஸாபராபாத்தில்தான்லஷ்கர் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேடுதல் வேட்டையில் இரு அமைப்புகளையும் சேர்ந்த சிலர் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விவரத்தை பாகிஸ்தான் நிர்வாகம் வெளியிடவில்லை.
ஜாகி உர் ரஹ்மான் லக்வி, லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவர். இவர்தான் மும்பைத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர் என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் இருந்தபடி இவர் மும்பையில் தீவிரவாதிகளை செயல்பட வைத்தார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வேட்டையின்போது ஜமாத் உத் தாவா அறக்கட்டளையை பாதுகாப்புப் படையினர் தங்கது வசம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ரெய்டு நடந்ததை அப்பகுதியில் வசிப்பவர்களும் உறுதி செய்துள்ளனர்.
இந்தியாவுடன் ஒத்துழைக்கத் தயார்:
இந் நிலையில் தீவிரவாதிகளை ஒடுக்குவது தொடர்பாகவும், கைது செய்து ஒப்படைப்பது தொடர்பாகவும் கடந்த ஒருவாரமாக முரண்டு பிடித்து வந்த பாகிஸ்தான் இந்தியாவுடன் ஒத்துழைக்கத் தயார் என்று அறிவித்துள்ளது. இது அமெரிக்காவை ஏமாற்ற பாகிஸ்தான் போடும் நாடகமாகவே இந்தியா கருதுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications