தீவிரவாத தாக்குதலுக்கு ஆளான தாஜ் ஹோட்டலில் தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி மீண்டுள்ள தாஜ்மஹால் ஹோட்டலின் ரெஸ்டாரென்ட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
தாஜ் ஹோட்டலில் கடந்த 26ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் 3 நாட்கள் நடந்த கடும் போருக்குப் பின்னர் கொல்லப்பட்டனர். இதில் ஹோட்டலின் உட்பகுதி பெரும் சேதத்தை சந்தித்தது.
இந்த நிலையில், ஹோட்டலின் 21வது மாடியில் உள்ள ரெஸ்டாரென்ட்டில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
ஆனால் இதற்கு மின்சாரக் கசிவே காரணம் என கூறப்பட்டுள்ளது. தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications