மத்தியப் பிரதேச முதல்வராக செளகான் டிச. 12ல் பதவியேற்பு
போபால்: மத்தியப் பிரதேச முதல்வராக சிவராஜ் செளகான் டிசம்பர் 12ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான சீட்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது பாஜக. சிவராஜ் செளகானின் சிறப்பான பணியைப் பாராட்டி மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் ம.பி. மக்கள்.
இதையடுத்து வருகிற 12ம் தேதி சிவராஜ் செளகான் 2வது முறையாக முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
நாளை காலை சட்டசபை பாஜக தலைவராக செளகான் முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ளார். அதன் பின்னர் கட்சி மேலிடத்துடன் அமைச்சர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கவுள்ளார் செளகான். பின்னர் வெள்ளிக்கிழமை அவர் முதல்வராகப் பதவியேற்பார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் ம.பியில் பாஜக வெற்றி பெற்றபோது உமாபாரதி முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் ஹூப்ளி விவகாரத்தி்ல் அவருக்கு சிக்கல் ஏற்படவே 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். பாபுலால் கெளர் முதல்ரானார்.
பின்னர் கெளருக்கு மக்கள் மத்தியிலும், கட்சி வட்டாரத்திலும் அதிருப்தி எழவே அவரும் ராஜினாமா செய்தார். இதையடுத்து 2005ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி முதல்வரானார் செளகான்.
தனது திறமையான நிர்வாகத்தால் ம.பி மக்களின் மனம் கவர்ந்த முதல்வராக திகழ்ந்த செளகான் அந்த நற்பெயராலால் கடும் எதிர் பிரசாரத்தையும் மீறி சிறப்பான வெற்றியை பாஜகவுக்கு ஈட்டித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications