தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
சென்னை: தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தியாகத் திருநாளாக கொண்டாடப்படுவது பக்ரீத். இன்று இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தமிழகத்திலும் வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாடப்பட்டது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் பக்ரீத் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
பக்ரீத்தையொட்டி குர்பானி எனப்படும் தானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் களை கட்டியிருந்தன. சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் ஒட்டகம் குர்பானியாக கொடுக்கப்பட்டது.
இதுதவிர இஸ்லாமியப் பெருமக்கள் தங்களது வீடுகளில் வளர்த்து ஆடுகளை வெட்டி குர்பானி கொடுத்தனர்.
புதுச்சேரியிலும் பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சிறப்பு குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சியில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச். ஷாஜகான் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications