பெண்ணுக்கு கொலை மிரட்டல் - திமுக பஞ். தலைவர் கைது
Subscribe to Oneindia Tamil
புளியங்குடி: பஞ்சாயத்து பெண் துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பஞ்சாயத்துத் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், சேர்ந்தமரம் செல்வ வினாயகர் கோவில் தெருவை சேர்ந்த தம்பி துரை மனைவி சுஜிதா. இவர் சேர்ந்த மரம் பஞ் துணை தலைவராக உள்ளார்.
இவரை கடந்த செப் மாதம் திமுகவை சேர்ந்த தலைவர் விசுவாசம் தொடர்ந்து கூட்டத்திற்கு சரிவர வரவில்லை என்று தீர்மானம் நிறைவேற்றி நீக்கம் செய்தார்.
இதையடுத்து நவம்பர் 11ம் தேதி அவரை சந்தித்த சுஜிதா, ஏன் என்னை நீக்கினீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது சுஜீதாவை அவதுறாக பேசியதுடன் கொலை செய்து விடுவதாக விசுவாசம் மிரட்டினாராம்.
இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸில் சுஜிதா புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி விசுவாசததை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications