நவம்பரில் கார், பைக் விற்பனை பெரும் வீழ்ச்சி
டெல்லி: நவம்பர் மாத கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. கார் விற்பனையில் 19 சதவீதமும், மோட்டார் சைக்கிள் விற்பனையில் 20 சதவீத வீழ்ச்சியும் காணப்பட்டது.
உள்ளூர் பயணிகள் கார் விற்பனை நவம்பர் மாதம் 83 ஆயிரத்து 59 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 31 ஆக இருந்தது. அதாவது விற்பனையில் வீழ்ச்சி 19.38 சதவீதம் ஆகும்.
அதேபோல மோட்டார் சைக்கிள் விற்பனை நவம்பர் மாதம் 4 லட்சத்து 31 ஆயிரத்து 171 ஆக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இது 5 லட்சத்து 40 ஆயிரத்து 553 ஆக இருந்தது. இது விற்பனையில் 20.24 சதவீத வீழ்ச்சியாகும்.
மொத்த டூவீலர் விற்பனை நவம்பர் மாதம் 14.68 சதவீதம் குறைந்திருந்தது.
அதேபோல, வர்த்தக வாகனங்களின் விற்பனையும் கூட கடந்த மாதம் தேக்கத்தை சந்தித்துள்ளது. மொத்தம் 20 ஆயிரத்து 637 வாகனங்களே விற்றுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை அளவு 40 ஆயிரத்து 879 ஆக இருந்தது. வீழ்ச்சி அளவு 49.52 சதவீதம் ஆகும்.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications