Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயார் நிலையில் இந்திய விமானப்படை-விடுமுறைகள் ரத்து

Subscribe to Oneindia Tamil

IAF-su30MKi
டெல்லி: இந்திய வி்மானப்படை உச்சகட்ட ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய அதிகாரிகளின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2001ம் ஆண்டுக்குப் பிறகு விமானப்படை உச்சகட்ட தயார் நிலையில் வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடும் தனது இறையாண்மையைக் காக்கவும், பாதுகாப்பை காத்துக் கொள்ளவும் முழு உரிமை கொண்டுள்ளது என்று, மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பதவியை ஏற்கவுள்ள பாரக் ஓபாமா தெரிவித்தார்.

அது முதலே, இந்திய எல்லையையொட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் படு சுதந்திரமாக இயங்கி வரும் தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தியாவின் பொறுமையை சீண்டும் வகையில் பாகிஸ்தானும், யாரையும் இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம், தவறே செய்திருந்தாலும் கூட அவர்களை நாங்களேதான் விசாரிப்போம். இந்தியாவிடம் யாரும் ஒப்படைக்கப்பட மாட்டார்கள். மீறி போர் வந்தால் சந்திக்கத் தயார் என வசனம் பேசி வருகிறது.

இந்தப் பின்னணியில் இந்திய விமானப்படை அதிகபட்ச ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆயத்த நிலையின் அளவு 'பேசிவ் ஏர் டிபன்ஸ்' (Passive Air Defence) என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

போர் விமானங்கள் ரெடி..:

இந்திய விமானப்படையின் அனைத்து போர் விமானங்களும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன. சில விநாடிகளில் கிளம்பிச் சென்று தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு தயார் நிலையி்ல் அனைத்துப் போர் விமானங்களும் வைக்கப்பட்டுள்ளன.

கடற்படையும்...:

இதுதவிர அரபிக் கடலில், மேற்குப் பிராந்திய கடற்படை போர்க் கப்பல்களும் கூட தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த உச்சகட்ட ஆயத்த நிலைக்கு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களிலிருந்து இந்திய நிலைகள் மீது வான் ரீதியாக தாக்குதல் நடத்தப்படலாம் என்று வந்த உளவுச் செய்திகளே காரணம்.

தற்போதைக்கு தடுப்பு நடவடிக்கையாகவே இந்த உச்சகட்ட ஆயத்த நிலையில் விமானப்படை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிலைகளைக் காக்கும் வகையிலேயே இந்த ஆயத்த நிலையில் விமானப்படை வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சகட்ட ஆயத்த நிலையைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள மேற்கு மற்றும் தென் மேற்குப் பிராந்திய ஏர் கமாண்டுகளில் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவரும் பணியில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுப்பில் செல்ல அனுமதிக்கப்படும் அளவும் 30 சதவீதம் என்பதிலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

விமானப்படை முழு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், ராணுவம் அந்த அளவுக்கு ஆயத்தப்படுத்தப்படவில்லை. எல்லைப் பகுதிகளுக்கு படைகளை முன்னெடுத்துச் செல்லும் உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.

மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து நியூயார்க் நகரின் இரட்டை கோபுரம் மீது தீவிரவாதிகள் நடத்திய விமானத் தாக்குதலைப் போல இந்தியாவிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ராணுவத் தளபதி முன்பு கூறியிருந்தார்.

அதுதொடர்பான உளவுத் தகவல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்தே விமானப்படை முழு அளவில் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

'ஆபரேஷன் பராகிரம்':

கடந்த 2001ம் ஆண்டு இதேபோல விமானப்படை முழு ஆயத்த நிலையி்ல் வைக்கப்பட்டது.

2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இதையடுத்து விமானப்படை முழு அளவில் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்களை தாக்க விமானப்படை திட்டமிட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் விமானப்படையினரை முழு அளவில் ஆயத்தப்படுத்துவதற்குள் பாகிஸ்தான் தனது படையினரை உஷார்படுத்தி வைத்து விட்டது.

இதனால் முழு அளவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டதால், அமெரிக்கா அவசரம் அவசரமாக தலையிட்டு இந்தியாவை அமைதிப்படுத்தி விட்டது. இதையடுத்து ஆபரேஷன் பராகிரம் திட்டம் கைவிடப்பட்டது.

அதன் பின்னர் தற்போது மீண்டும் விமானப்படை முழு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானை தாக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+