கூகுள் எர்த்தின் சாட்டிலைட் படங்களைத் தடை செய்யக் கோரி வழக்கு
மும்பை: கூகுள் எர்த்தில், நாட்டின் முக்கிய இடங்களின் சாட்டிலைட் படங்கள் இடம் பெறுவதை தடை செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமீத் கர்கானி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கூகுள் எர்த் இணையதளத்தில் நாட்டின் முக்கிய பகுதிகளின் சாட்டிலைட் படங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும். அல்லது பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இவற்றை முடக்கி வைக்கவாவது உத்தரவிட வேண்டும்.
இந்தியாவில் உள்ள அணு உலைகள், பாதுகாப்பு நிலைகள் ஆகியவற்றின் படங்கள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இது மிகவும் ஆபத்தானது. மும்பைத் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகள், கூகுள் எர்த் தளத்தைப் பயன்படுத்தியிருப்பது இதை மேலும் உறுதி செய்வதாக உள்ளது என்று அதில் கூறியுள்ளார்.
இந்த மனு வருகிற 18ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் தவிர மத்திய பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
கூகுள் எர்த் தளத்தில் உலகின் அனைத்துப் பகுதிகளின் சாட்டிலைட் படங்களையும் பார்க்கலாம். நமது வீட்டைக் கூட, கூகுள் எர்த் 'மொட்டை மாடி'யிலிருந்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications