பெண்ணை கற்பழிக்க முயன்ற அரசு பஸ் டிரைவர்
செங்கோட்டை: அரசு பேருந்தில் தனியாக வந்த இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
செங்கோட்டை அருகேயுள்ள அச்சன்புதூரை சேர்ந்த ஜாகீர் உசேன் மனைவி பாத்திமா. இவர் திருப்பூரி்ல் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் விடுமுறைக்கு ஊருக்கு புறப்பட்டு மதுரை வந்தார்.
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு இரவு 10.30 மணிக்கு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி கடையநல்லூருக்கு டிக்கெட் எடுத்தார். பேரூந்து கடையநல்லூர் வரும்போது நள்ளிரவு 1.30 மணியாகிவிட்டதால் பேருந்தின் டிரைவர் வீரச்சாமி என்பவர் செங்கோட்டைக்கு போனால் பேரூந்து இருக்கும் என்று கூறவே அவரும் நம்பி அதே பேருந்தில் செங்கோட்டைக்கு வந்தார்.
அப்போது டிரைவர், நள்ளிரவு ஆகிவிட்டது, எனது ரூமில் தங்கிவிட்டு காலையில் ஊருக்கு செல்லுங்கள் என்று கூறி பாத்திமாவின் பேக்கை வாங்கி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு விடுதிக்கு கூட்டு சென்றுள்ளார். உடனே விடுதி காவலாளி விடுதியை பூட்டி விட்டாராம்.
இந்த சமயத்தில் பாத்திமாவை டிரைவர் வீராச்சாமி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். பாத்திமா அலறவே விடுதி காவலாளி கதவை திறந்துள்ளார். கதவை திறந்து பாத்திமா ரோட்டுக்கு அலங்கோலமாக ஓடி வரவே அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் செங்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் வீராச்சாமியை கைது செய்தனர்.
நள்ளிரவில் தனியாக பேரூந்தில் வந்த இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று, அரசு பஸ் டிரைவரே கற்பழிக்க முயற்சித்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
