லஷ்கரின் முகமூடி அமைப்பு ஜமாத்-உல் தாவா: தடை செய்ய ஐ.நாவுக்கு இந்தியா கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Hafeez Sayeed
ஐ.நா: லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான ஜமாத் உல் தாவாவை தடை செய்ய வேண்டும் என ஐ.நா. சபையில் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

நியூயார்க் தாக்குதலையடுத்து லஷ்கர் ஏ தொய்பா அமைப்பை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து அந்த அமைப்பு ஜமாத் உல் தாவா என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தது.

இந்த அமைப்புக்கு வழக்கம் போல ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவம், அரசின் உதவிகள் கிடைத்து வருகின்றன. ஜமாத் உல் தாவா என்ற முகமூடியுடன் லஷ்கர் ஏ தொய்பா செயல்பட்டு வருகிறது.

லஷ்கர் ஏ தொய்பாவை நிறுவிய ஹபீஸ் முகம்மத் சயீத் தான் இப்போது ஜமாத் உல் தாவாவின் தலைவராகவும் உள்ளார்.

இந் நிலையில் ஐ.நா. சபையில் பேசிய இந்திய வெளியுறவு இணையமைச்சர் இ. அகமது, ஜமாத் உல் தாவா மற்றும் அதேபோன்ற இதர அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும். அவற்றின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

அந்த அமைப்பு தோன்றிய நாடு (பாகிஸ்தான்), அந்த அமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைக் காப்பாற்ற அந்த நாடு முயலக் கூடாது.

தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சம்பந்தப்பட்ட நாடு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் முன்பு அவர்களை நிறுத்த வேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் தர முயலக் கூடாது. அரசுகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையிலான உறவு உடனடியாக முறிக்கப்பட வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+