மோதல்-2 சட்ட மாணவர்கள் கைது
சென்னை: சட்டக் கல்லூரியில் மோதலில் ஈடுபட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகிய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் கடந்த மாதம் இரு தரப்பு மாணவர்களுக்கிடையே பெரும் ஜாதி மோதல் நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 43 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மோதலில் காயமடைந்த பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாத்துரை ஆகிய மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந் நிலையில் நேற்று மாலை பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 307ஐ.பி.சி (கொலை முயற்சி), 506(2) ஐ.பி.சி. (கொலை மிரட்டல்) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் அவர்களை சிறையில் அடைக்காமல், போலீஸ் காவலில் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க அனுமதித்தனர். இதனால் அவர்களை கைதான நிலையிலும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருவரிடமும் இன்று ஜார்ஜ்டவுன் 7வது கோர்ட்டு மாஜிஸ்திரேட் ரவி மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்துகிறார். அப்போது சைதாப்பேட்டை நீதித்துறை அதிகாரிகளும் உடன் இருப்பார்கள். இதன்பிறகு பாரதிகண்ணன், ஆறுமுகம் இருவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இந்த மோதலில் காயமடைந்த மாணவர் சித்திரைச்செல்வன் கைது செய்யப்பட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கைதிகள் வார்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த சித்திரைச்செல்வன் நேற்று சைதாப்பேட்டை சப்- ஜெயிலில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டக்கல்லூரி மோதல் மற்றும் கல்லூரி முதல்வர் அறையை சூறையாடியது என எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடந்த மோதல் வழக்கில் தற்போது கைதாகியுள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகியோருடன் சேர்த்து இதுவரை 23 பேர் கைதாகியுள்ளனர். 9 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.
கல்லூரி முதல்வர் அறையை சூறையாடிய வழக்கில் 14 பேர் கைதாகியுள்ளனர்.
இதற்கிடையே நீதிமன்பற உத்தரவுபடி நேற்று சட்டக் கல்லூரி தேர்வுகள் தொடங்கின. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications