டிக்கெட் எடுக்காத பயணி நிர்வாணமாக ஓட்டம்
சென்னை: டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணியை, டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்தபோது, அந்த பயணி தனது உடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கேளம்பாக்கத்திலிருந்து பிராட்வேக்கு மாநகர பஸ் இன்று காலை வலந்தது.
பஸ், சேப்பாக்கம் நிறுத்தத்திற்கு வந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி டிக்கெட் எடுக்காமல் இருந்தது தெரியவந்தது.
அவரை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்தபோது திடீரென அந்த நபர் ஆடையை கழற்றி வீசிவிட்டு நிர்வாணமாக ஓடியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பரிசோதகர்கள், சுதாரித்துக் கொண்டு அவரைத் துரத்திப் பிடித்தனர். சிறிது தூர துரத்தலுக்குப் பின்னர் சிக்கிய அந்த நபரிடம், டிரஸ்ஸைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வைத்து பின்னர் அண்ணா ஸ்கொயர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த வித்தவுட் நபரின் பெயர் ராஜசேகரன். 50 வயதாகும் அவர் கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர். டீக்கடையில் வேலை பார்த்து வருகிறாராம்.
இனிமேல் இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications