முதலீடு அதிகரிப்பு: மீண்டும் ரூ.10,000க்கு போகும் தங்கம்!

Subscribe to Oneindia Tamil

Shreya and her mother in jewel shop inauguration
சென்னை: பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை திடீர் என்று அதிகரித்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் மீண்டும் ரூ.10,000த்தை நெருங்குகிறது. நேற்று மட்டும் பவுனுக்கு ரூ.200 கூடியது.

தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.10,112 ஆக உயர்ந்தது. அதன் பிறகு, சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது.

கடந்த 4ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ. 9,264 ஆக இருந்தது.

இதன் பின்பு தங்கம் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால் மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 8ம் தேதி முதல் தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரு பவுன் விலை ரூ.9,256 ஆக இருந்தது.

நேற்று ஒரு பவுன் ரூ.9,456 ஆக மீண்டும் உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 கூடியுள்ளது.

இனி மேலும் உயரும் என சென்ன நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+