கருணாநிதியுடன் இங்கிலாந்து தூதர் ரிச்சர்ட் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

Karunanidhi and UK team
சென்னை: முதல்வர் கருணாநிதி, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் சர் ரிச்சர்ட் ஸ்டாக் இன்று சந்தித்துப் பேசினார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்று என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்திப்பின்போது சென்னையில் உள்ள இங்கிலாந்து துணைத் தூதர் மைக் கானர், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, முதன்மை நிதி செயலாளர் ஞானதேசிகன், பொதுப்பணித்துறை செயலாளர் தேவ ஜோதி ஜெகராஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.

தலைமை நீதிபதியுடன் கருணாநிதி சந்திப்பு:

இதற்கிடையே, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியை முதல்வர் கருணாநிதி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஏ.கே.கங்குலியை அவரது இல்லத்திற்கு சென்று முதல்வர் சந்தித்து வாழ்த்தினார். அப்போது பொதுப்பணித்துறை மற்றும் சட்ட அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+