ஜெவை பாராட்டும் சிவகாமி-திமுக மீது தாக்கு
நெய்வேலி: தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு என்பது கண்துடைப்பு வேலை என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் சிவகாமி கூறினார்.
ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த சிவகாமி நெய்வேலியில் நிருபர்களிடம் பேசுகையில்,
பெண்ணுக்குப் பெண் விரோதி இருக்க மாட்டார்கள். ஜெயலலிதா பல சவால்களையும், பின்னடைவுகளையும் சந்தித்து வெற்றி கண்ட மிகச் சிறந்த சாதனையாளர்.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் இணையுமா என்பதை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தெரிந்து கொள்வீர்கள்.
வெறும் 1.5 சதவீதம் கூட வாக்கு இல்லாத விடுதலை சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் அமைப்புகளுடன் எங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி, விஜயகாந்த் கட்சியிலிருந்தும் ஏராளமானோர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு என்பது கண்துடைப்பு வேலை. தமிழக அரசு ஆதிதிராவிட மக்களுக்கான 18 சதவீத ஒதுக்கீட்டையே முறையாக அமல்படுத்தவில்லை. குறிப்பாக, 18 சதவீத சிறப்புக் கூறு திட்டத்தின் வாயிலாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அருந்ததியினருக்கு அமைச்சரவை மற்றும் எம்எல்ஏ சீட்டுகளில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்வார்களா? என்றார் சிவகாமி.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications