இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் - யுரேனியத்தில் நம்பர் 2வான கஜகஸ்தான் விருப்பம்

இந்தியாவின் அணுத் தனிமைக்கு சமீபத்தில் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியும், அணுப் பொருள் சப்ளை குழுமம் ஆகியவை முற்றுப்புள்ளி வைத்தன.
இதையடுத்து பிரான்ஸுடன் இந்தியா முதலில் சிவில் அணு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அடுத்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
பின்னர் சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் மெத்வதேவ் இந்தியா வந்திருந்தபோது அந்நாட்டுடனும் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், உலகிலேயே யுரேனியம் இருப்பில் 2வது இடத்தை வகிக்கும் கஜகஸ்தான் நாடும், இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசுத் தின விழாவி்ன் முக்கிய விருந்தினராக கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸர்பயேவ் கலந்து கொள்கிறார். அவரது இந்திய வருகையின்போது இந்த சிவில் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக இரு நாட்டு அணு சக்தி அமைப்புகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கி விட்டன. அணு உலைகள் அமைப்பது, யுரேனிய விநியோகம் மற்றும் இரு நாடுகளும் இணைந்து அணு எரிபொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து கஜகஸ்தான் நாட்டு தூதர் கைராத் உமரோவ் கூறுகையில், இதுகுறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது விரிவாக எதையும் கூறுவதற்கில்லை என்றார்.
கஜகஸ்தானுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது நமது சிவில் அணு சக்தித் திட்டங்களுக்கு பெரும் பலனைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications