தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு பிரதமர் கோரிக்கை
டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்க மாநில அரசுகள் உறுதியான, விரைவான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் தார்மீகக் கடமை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த மனித உரிமை மற்றும் சட்டம் குறித்த சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஜனநாயகத்திற்கும், வளர்ச்சிக்கும், மிகப் பெரிய அச்சுறுத்தலாக விஸ்வரூபம் எடுத்து வருவது குறித்த விழிப்புணர்வு நமது பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது.
மாநில அரசுகளும், அதிகாரிகளும், காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும், இதை உறுதியாகவும், விரைவாகவும் ஒடுக்க வேண்டியது அவர்களின் தார்மீகக் கடமையாகும்.
உலகெங்கிலும் உள்ள அமைதி விரும்பிகளும், ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து, கை கோர்த்து, தீவிரவாதத்திற்கு எதிராக போராட திரள வேண்டும்.
தீவிரவாத மிரட்டல் சற்றும் வலுக் குறையவில்லை. அதேசமயம், தீவிரவாதத்திற்கு எதிரான போரிலும் எந்தப் பிளவும் இல்லை. சுதந்திரத்தைக் காப்பதிலும், அமைதியை நிலை நிறுத்துவதிலும் எந்தப் பின்னடைவும் இல்லை.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவுக்கு தங்களது ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்தன. அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அண்டை நாடுகளின் தலைவர்கள் உள்பட பல தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என அவர்கள் அப்போது உறுதியளித்தனர் என்றார் மன்மோகன் சிங்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications